ஓரு நூற்றாண்டுக்கு பின்னர் இழந்த தமது இன அடையாளத்தினை மீளத் தேடும் பொருட்டு பொங்கல் திருநாளினை குவாட்லூப் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.
மத்திய அமெரிக்க கறேபியன் ( மார்ரீனிக் – குவாட்லூப் )தீவுகளுக்கு 1854ம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்களுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களாக இவர்கள் உள்ளனர்.
பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இப்பகுதியில் ஓரு நூற்றாண்டினைக் கடந்து வாழ்ந்து வரும் இங்குள்ள தமிழர்கள் பல தலைமுறையினைக் கடந்துள்ள நிலையில் பிரென்சு மொழியினைப் பேசுகின்றவர்களாக உள்ளனர்.
தொடக்க காலத்தில் “koulis” (கூலி) என அழைக்கப்பட்ட இங்குள்ள தமிழர்கள் தலைமுறைத் தொடர்சியில் ஓரளவு குடிமக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றவர்களாக வாழந்து வருகின்றனர்.
குடும்ப பெயரளவில் இருந்து வரும் நிலையில் இழந்த தங்களதுஇன அடையாளத்தினை பண்பாட்டுரீதியாக மீளவும் கொண்டுவரும் பொருட்டு ஓரு நூற்றாண்டுகளுக்கு பின்னர் இவ்வாண்டு பொங்கல் திருநாளினைக் கொண்டாடியுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்ட ரெயூனியின் தீவுப்பகுதியில் பொங்கல திருநாளினை அண்டிய தைப்பூசப் பெருவிழா இங்குள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் சைவக் கடவுளென வர்ணிக்கப்படுகின்றன முருகனின் முக்கிய வழிபாடு பெருநாளாக தைப்பூச பெருவிழா அமைகின்றது.
இங்குள்ள தமிழர்களும் இழந்த தங்களது இன அடையாளத்தினை மீளவும் தேடும் பொருட்டு கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எனும் கண்காட்சியினை இங்கு நடந்திருந்த நிலையில் 2009ம் ஆண்டு தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவழிப்புக்கு எதிராக இங்குள் தமிழர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.