வல்வை நேதாஜி-வல்வை விளையாட்டுக்கழக உதைபந்து கிண்ணத்தைக் கைப்பற்றியது
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017 இன்று உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது.
இரு அணிகளும் கோல்கள் போடாமையினால் சமனிலையை அடைந்தமையினால் நடுவர்களால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் வல்வை நேதாஜி விளைட்டுக்கழகம் வெற்றி பெற்றது
முதலாமிடத்தை வல்வை நேதாஜி இ.வி விளையாட்டுக்கழகம்
இரண்டாமிடத்தை வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது
மூன்றாமிடத்தை வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது
வல்வை நேதாஜி இ.வி.கழகம் முதலாமிடம்