மத்திய லண்டனில் உள்ள லெய்செஸ்டெர் (Leicester) எனும் நகரத்தில் அமைந்துள்ள கார் இருப்பிடத்திற்கு அடியில் சமீபத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
இது, 15ம் நூற்றாண்டில் பிரிட்டனில் ஆட்சி செய்த மன்னனான ரிச்சர்ட் 3(Richard III) என்பவருக்குச் சொந்தமானது என இன்று தொல்பொருள் ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
இது குறித்து லெய்செஸ்டெர் பல்கலைக் கழகம், கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுடன் மன்னனின் தாய் வழி வந்த சந்ததிகளின் DNA மாதிரி ஒத்துப் போவதை வைத்து இதற்குச் சொந்தக்காரர் மன்னர் Richard III என்பவரே என உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
மேலும் இந்த அரிய கண்டுபிடிப்பின் விளைவாக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இம்மன்னர் பற்றிய விபரங்களை பிரித்தானியாவின் வரலாற்றுப் புகழ்மிக்க கவிஞரான சேக்ஷ்பியர் கூட தனது படைப்புக்களில் கூறியிருந்தார்.
பிரித்தானியாவின் பொஸ்வோர்த் (Bosworth) இல் 1485ம் ஆண்டு இடம்பெற்ற போரின் போது இவரது மண்டையோட்டில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டமைக்குச் சான்றாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள மண்டையோட்டில் ஓட்டை காணப்படுகின்றது.