சீனாவின் உயர்மட்ட அரசியல் குழுவுக்கான ஆலோசகராக நடிகர் ஜெக்கி சேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சீன அரசியலில் உத்தியோகபூர்வமாக அவர் கால்பதித்துள்ளார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் புதிய ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்கவுள்ளார்.
இந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் ஜின்பிங்.
சமீபத்தில் சீனாவை விட அமெரிக்காவே ஊழல் மலிந்த நாடு என கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஜெக்கி சேன்.
ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த ஜெக்கிசேன் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடத்தி வருகின்றார். இதுவரை சுமார் 150 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.