எழுத்து பிழைகளை சுட்டி காட்டும் அதிசய பேனா

எழுத்து பிழைகளை சுட்டி காட்டும் அதிசய பேனா

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எழுதும் போது தவறுகள் விடுவது பெரும்பாலும் இருக்கிறது இந்த தவறுகளை எழுதும் போதே சுட்டி காட்டும் முகமாக புதிய பேனா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஜெர்மன் நிறுவனம் ஒன்று

yarlmedia_penபிழையுடன் எழுதினால், சுட்டிக்காட்டும், நவீன பேனாவை, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த, “லெர்ன்ஸ்டிப்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள பேனாவை பயன்படுத்தி எழுதும்போது, எழுத்துப்பிழை அல்லது இலக்கணப்பிழை ஏற்பட்டால், உடனே பேனாவில் உள்ள சென்சார், எழுதுபவரின் கைவிரல்கள் உணரும்படி, அதிர்வை ஏற்படுத்தும். எழுதியதில் தவறு இருக்கிறது என்று, இதன் மூலம், உடனே தெரிந்துகொள்ள முடியும். “குழந்தைகள் தவறில்லாமல் எழுத உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேனா, எல்லா வயதினருக்கும் உபயோகமாக இருக்கும்’ என, லெர்ன்ஸ்டிப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.