யாழ்ப்பாணத்தில் யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்

2ம் இணைப்பு –  யாழ்ப்பாணத்தில்  யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்
யாழ்.குடாநாட்டினில் ஊடகங்கள் மீதான வன்முறை என்றுமில்லாத வகையில் மீண்டும் அதிகளவில் அண்மைக்காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது.இவ்வகையில் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.அத்துடன் பத்திரிகை விநியோகப்பணியாளரும் கண்மூடித்தனமாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.தாக்குதலில் காயமடைந்த நிலையில் வீதியோரமாக வீசப்பட்டிருந்த அவரை வீதியால் பயணித்த பொதுமக்கள் சிலர் மீட்டெடுத்து  அனுப்பி வைத்துள்ளனர்.இதனிடையே கூடச்சென்ற மற்றொரு நாளிதழ் விநியோகப்பணியாளர் மீதும் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்ற போதும் அவர் தப்பித்து சென்றுள்ளார்.யாழ்-பருத்தித்துறை வீதியின் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியினில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விநியோப்பணியாளரால் எடுத்துச்செல்லப்பட்ட யாழ்.தினக்குரல் பத்திரிகை பிரதிகளை பறித்தெடுத்த அடையாளம் காணப்படாத நபர்கள் பின்னர் அவற்றை தீ வைத்து எரித்துள்ளனர்.சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அவை தீப்பற்றி எரிந்த வண்ணமிருந்தது.தாக்குதலாளிகள் நீண்ட நேரமாக அப்பகுதியில் தரித்து நின்றதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அண்மையில் வடமராட்சியின் மாலுசந்திப்பகுதியினில் இதே பாணியினில் உதயன் நாளிதழ் தீக்கிரையாக்கப்பட்டள்ளது.அத்துடன் விநியோகப்பணியாளர் தாக்கப்பட்டிருந்ததுடன் நாளிதழை விநியோகத்திற்கு எடுத்து சென்றிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.இச்சம்பவம் இடம்பெற்ற சிறிது காலப்பகுதியினுள் யாழ்.தினக்குரல் நாளிதழ் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.