காலைப் பொழுது…!
பொழுது புலர்ந்து கொண்டிருந்தது
கூடுகளில் கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த
பறவைகள் இரை தேடுவதற்காக தாம் சிறகுகளை
உலர்த்தி உல்லாசமாக பரந்து விரித்து பறக்கத் தொடங்கின
ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்து
புலர்ந்து கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதிற்கு
இசைவாக இசை முழங்க
இருளில் கௌவிக்கொண்டிந்த வானத்து சூரியனும் தான்
பங்கிற்கு தான் செம்கதிர் ஒளிக்கற்றைகளை
புமிப் பந்தில் பதித்த வேளையில்
மெல்ல மெல்லமாய் அந்த மாய இருள்
ஓடி ஒளித்து கொண்டிருக்கையில்
மகனே வாடப்பா! உலகின் ஒளியே வாடப்பா!
என்று உலக மக்கள் வரவழைக்க
பூமிப் பந்தின் எல்லா மக்களும் எரித்து நிற்கையில்
அந்த மக்களின் கண்களின் ஆரத்தழுவிய கண்ணீரைக்கண்ட.
அந்தக் பொற்கதிரவன் வானம் வந்த வேளை தான்
காலைப்பொழுது வேளை!