
தஞ்சாவூரில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மதுரை ஆதீனம் அருண கிரிநாதர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அவரை இந்தியாவிற்கு அழைப்பது தமிழர்களுக்கு செய்யும் தீங்காகும். துரோகமாகும்.
இப்போது கூட அங்கு இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழர்களுக்கு துரோகம் செய்த ராஜபக்ச திருப்பதிக்கு வருவது நல்லது அல்ல.
இலங்கையில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை இடித்த ராஜபக்ச மனசாட்சிக்கு விரோதமாக இந்தியாவிற்கு வருவதை வரவேற்பதையும், அவரை தரிசனம் செய்ய அனுமதிப்பதையும் தமிழர்கள் மனது ஏற்றுக் கொள்ளாது. ஆண்டவன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார். மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்