இந்தியாவின் முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் Micromax ஆனது காதலர் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி A116 Canvas HD எனும் தனது புதிய கைப்பேசிகளை விற்பனைக்கு விட தயாராகின்றது.
5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் இவை Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவுடன் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென VGA கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
இவற்றின் சேமிப்பு கொள்ளளவானது 4GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் கொள்ளளவை அதிகரித்துக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவற்றின் பெறுமதியானது 280 அமெரிக்க டொலர்கள் ஆகும்.