பன்னாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளாகவும் ஆதரவாளர்களாகவும் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.
இவர்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு கோத்தபாய தெரிவித்துள்ளார்.
மயப்படுத்தி வருவதாகச் சில குழுக்கள் கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர், நிலையான சமாதானத்தையும், நல்லெண்ணத்தையும் உருவாக்கவே பாதுகாப்புப் படைகளை அரசு பலப்படுத்தி வருவதாகவும் அவர் விபரித்தார்.
விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத அச்சுறுத்தலில் இருந்து நாடு இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பல குழுக்களும், வெளிநாடுகளில் உள்ள தனிநபர்களும் இலங்கையைப் பிரித்துத் தனிநாடு ஒன்றை உருவாக்கும் ஒரே கொள்கையுடன் செயற்படுகிறார்கள்.
இலங்கையில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் அந்த அமைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக அளவில் மீளமைக்க முனைகின்றனர்.
கொழும்பில் சிறிலங்கா பவுண்டேசனில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற “தேசிய பாதுகாப்புக்கான எதிர்காலச் சவால்கள்” என்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை அரசு நாட்டை இராணுவப்
இந்தநிலையில் பலம்வாய்ந்த பாதுகாப்புப் படைகளை கொண்டிருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது.
நாட்டில் எந்தவொரு தீவிரவாத முயற்சிகளையும், புலனாய்வுப் பிரிவுகளின் துணையுடன் முறியடிக்கின்ற திறன் இலங்கைப் படைகளுக்கு உள்ளது. இதற்காக அரச புலனாய்வுப் பிரிவை முழுமையாகப் பலப்படுத்தவுள்ளது.