செவ்வாய் கிரக பாறையை துளையிட்டது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரக பாறையை துளையிட்டது கியூரியாசிட்டி
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் முதன்முதலாக பாறை ஒன்றை துளையிட்டுள்ளது.

அதற்கான புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளையும் ரோவர் விண்கலம் எடுத்துள்ளது.

நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 1.6 சென்டி மீற்றர் அகலமும், 6.4 சென்டி மீற்றர் ஆழமும் கொண்ட துளை ஒன்று பாறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்த பாறை மூலம் முன்னொரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.