வல்வெட்டித்துறை தெணியம்பையை சேர்ந்த செல்வன் முரளி திபாகர் என்ற இளைஞன் கராத்தே விளையாட்டில் யாழ்மாவட்டரீதியாகவும்,அகில இலங்கை ரீதியாகவும் வெற்றிகளையும் தங்கப்பதக்கத்தையும்பெற்றிருக்கின்றார்.
இந்த கராத்தேயில் முதலாவது கறுப்புபட்டியை (black belt) 2000ம்ஆண்டு பெற்றுக்கொண்டார்.
ஆரம்பநிலை பட்டிகளை பெற்று தேர்ச்சிஅடைந்து 2010ல் இந்த சோட்டோகன் கராத்தேயிலும் கறுப்புபட்டியை பெற்றுக்கொண்டார்.
‘காட்டா’ (kata)போட்டியில் முதலாம்இடத்தை பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
2010 நவம்பரில் தேசியரீதியில் வென்னப்புவஉள்ளரங்கில் நடாத்தப்பட்ட கராத்தேபோட்டியில் ‘காட்டா”குயிற்றே’ போட்டிகள் இரண்டிலும் சிறப்பாக விளையாடி ‘சிறந்த எண்மர்’ என்ற சான்றிதழ் பெற்றார்.
இதன்மூலம் சிறீலங்காவில் நடைபெறும் ’10வது சர்வதேச ‘எஸ்.கே.ஏ’ கராத்தே சாம்பியன்போட்டியில் ( 10th international S.K.A Karate Championship) கலந்துகொள்ளும் தகுதியும் பெற்றார்.









