டெஹ்ரான் : அணுஆயுதபிரச்னை தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் கூறியுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் அகமதிநிஜாத் கூறியதாவது, இவ்விவகாரத்தில், தங்களுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்காத பட்சத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்த நேரடி பேச்சுவார்த்தைக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜோ பீடன் விடுத்த அழைப்பை, அகமதிநிஜாத் நிராகரித்திருந்த நிலையில், இவ்வாறு அகமதிநிஜாத் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
