நெடியகாடுவடக்குஞானவைரவர்கோயில்எண்ணெய்க்காப்புசாத்துவிழா .13.02.2013
வைரவர் ,ஞானவைரவர், காலவைரவர், சுவர்ண வைரவர்என்ற பெயர்களில் வைரவர் கோவில்கள் அமைந்துள்ளன. எட்டுத் திக்கையும். இருள் நீக்கிக்கப்பதட்கு எட்டுசக்திகளுடன் வடிவெடுத்தார். 1.அசிங்க வைரவர் பிராம்மி 2.குருவைரவர் மகேஸ்வரி 3.உன்மத்த வைரவர் வராஹி 4.குரோதன வைரவர் வைஷ்ணவி 5.சண்ட வைரவர் கவுமாரி 6.கபால வைறவர் இந்திராணி 7.பீபுண வைரவர் சாமுண்டி 8.சம்ஹார வைரவர் சண்டிகா என்பனவாகும்.
சனியின் பார்வை பட்டவர்கள் வைரவரை வணங்க வேண்டும் .அதாவது சனியின் தமயனே எமன் .அவர் வைரவரை வேண்டி பலவரம் பெற்றமையினால் சனியும் வைரவரை குறித்து கடும் தவம் செய்து வரம் பெற்றார்.அதன்படியே சனிப்பெயர்ச்சிப் பலன் அதன் நன்மை தீமையை செய்ய வைரவர் அருளினார். அதேவேளை சனியின் கெடுபலனுக்கு ஆளான எவர் ஒருவரும் தன்னை வழிபடுவராயின் அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது வைரவரின் வேண்டுகோள். அதனால் ஏழரைச்சனி அட்டமத்துச் சனியால் அவதிப்படுவோர் வைரவ வழிபாடு செய்தல் உத்தமம் ஆகும்ஆகவே வைரவருக்கு எண்ணை காப்பு சாத்தி ஞானவைரவரின் அருளை பெறுக. .