கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் வைத்தே இவ்விருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரச ரட்ணம் உறுதிப்படுத்தினார்.
மாணவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை அடுத்து மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின் இறுதியில் மாணவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்