Search

ஈழத்தமிழர்கள் நடிப்பில் வெளியாகும் “மாறு தடம்”

ஓசை பிலிம்ஸின் முதற் தயாரிப்பாக கலைவளரி சக.ரமணாவின் “மாறு தடம்” எனும் முழுநீளத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சுவிஸில் வெளிவரவுள்ளது.இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் பற்பல துறைகளில் தங்களை முன்னேற்றி மாபெரும் உலகத் தமிழ்ச் சமூகமாக மாற்றம் கண்டுள்ளனர்.
 அவர்களுடைய உழைப்பு, புலம் பெயர்வு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியது. ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி கண்டுவரும் இவர்கள், நாடகத்துறை, திரைப்படத்துறை போன்றவற்றில் பெரிதாக வளர்ச்சி காணவில்லை.
அதற்கு தகுந்த தயாரிப்பாளர்கள், சந்தை மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற பற்பல நடைமுறை காரணங்களால் கலைஞர்கள் துணிந்து திரைத்துறைக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே ஓசை பிலிம்ஸ்.
இதன் நோக்கம் திரைக்கலைத்திறன் மிக்க கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுடைய திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்குவதே ஆகும். இந்நிலையில் ஓசை பிலிம்ஸ் மற்றும் விஷ்னி சினி ஆர்ட்ஸ் இணைந்து மாறு தடம் என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளது.
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 27.01.2013 Restaurant Steinhof – Bernstrasse 61 – 3400 Burgdorf – ல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அகண்ட திரையரங்கில் காண்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுவிஸின் பல பாகங்களிலும் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, கொலண்ட், லண்டன், இத்தாலி, நோர்வே, டென்மார்க், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது.
படத்தில் ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா, சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, ஜெனிஸ்ரன், லக்ஷகன், அஜித், கௌசி, லோகதாசன் நடித்துள்ளனர்.
மேலும் பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி.அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன் இலங்கை யாழ்ப்பாண கலைஞர்களும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாரிஸ் கலைஞர் ஏ.ரகுநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இசை, வா.யதுர்சன்(சுவிஸ்), மு.உதயன் (சுவிஸ்). ஒளித்தொகுப்பு, கிருபா(சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்). பிரத்தியேக சத்தம், டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்), டி.ரி.எஸ்(D.T.S). ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை) கிராபிக்ஸ் & டிசைன், விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை).வண்ணக்கலவை, பிஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை). ஒப்பனை, தயா லோகதாசன்(சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்). இணைக்கதை, பாலகிருஷ்ணன். ஒளிதொகுப்புத் தயாரிப்பு, விஷ்னி சினி ஆர்ட்ஸ்.தயாரிப்பு,ஓசை பிலிம்ஸ். கதை, எழுத்து, படத்தொகுப்பு, பாடல்கள், ஆக்கம்,கலைவளரி சக.ரமணா (ரமணதாஸ்).
Leave a Reply

Your email address will not be published.