திருக்கோயிலில் முன்னாள் பெண் போராளி கைது! கிழக்கில் அதிகரிக்கும் கைதுகள்?

திருக்கோயிலில் முன்னாள் பெண் போராளி கைது! கிழக்கில் அதிகரிக்கும் கைதுகள்?

மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் புணர்வாழ்வு அளிக்கப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ள முன்னாள் போராளிகளை இராணுவ சீருடையில் வருவோர் பலமுறை தொந்தரவு கொடுப்பதாகவும் இதனால் தமது பிள்ளைகளை பாதுகாப்பது எவ்வாறு என்பது எமக்கு தெரியாதுள்ளது என கவலையடைவதாக புணர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின்; பொற்றோகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாது கிழக்கிலுள்ள முன்னாள் போராளிகள் மெனிக்பாம், வவுனியா பூந்தோட்டம், அனுராதபுரம்,மற்றும் நாட்டின் ஏனைய பல பாகங்களிலுமுள்ள பல புணர்வாழ்வு நிலையங்களில் புணர்வாழ்வழ்வு என்பதற்காக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அவர்ளை உத்தியோகபூர்வதாக சிறைச்சாலை ஆணையாளர் அவர்களின் உத்த்தியோக பூர்வ முத்திரை பொறிக்கப்பட்ட கடிதத்துடன் விடுவிக்ப்பட்டனர்.

தற்போது புணர்வாழ்வழிக்பட்டவர்களை அவர்களது வீடுகளுக்கு இராணுவ சீருடையில் வருவேர் நீங்கள் எங்கு இருந்தீர்கள் எவ்வாறு பயிற்சி பெற்றீர்கள்,என்னவகையான ஆயுதங்கள் பயன்படுத்தீனீர்ள். என பல்வேறு கேழ்விகளைக் கேண்டு தினமும் தொந்தரவு செய்து வருகின்றார்கள்

இது இவ்வாறு இருக்க திருக்காவில் கிராமத்தில் நேற்றயதினம் (13.02.2013) இவ்வாறு ஒரு பெண் முன்னாள் போராளியை இராணுவ சீருடையில் வந்தவர்கள் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பெற்றோர் பொலிசாரிடம் போய் கேட்டபோது உங்களுடைய மகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளோம் விசாரணையின் பின் வீடுவேம் என பொலிசார் கூறியதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

வருடக்கணக்காய் புணர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைத்திருந்து என்ன விசாரணைகளை மேற்கொண்டார்கள் என்பது தெரியாது? தற்போது என்ன விசாரணை பெறப் போகின்றார்கள் என்பதும் தெரியாத நிலையில் இக்குறித்த முன்னாள் பெண்போராளியின் பெற்றோர் கவலையுடன் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.