மாதந்தையின் 2ம்ஆண்டு நினைவு இன்று

மாதந்தையின் 2ம்ஆண்டு நினைவு இன்று

பேரிருள் சூழ்ந்த எம்
இருண்ட வானத்தின்
இருள் அகற்ற வந்த
சூரியதேவனை எமக்களித்த
மாதந்தை அமரர் தி.வேலுப்பிள்ளை நினைவு இன்று
2010 ஜனவரி 6ம்நாள் பனாகொட சிங்களராணுவமுகாம் சிறைக்குள் மரணத்தை தழுவிக்கொண்ட
திரு.திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம்ஆண்டு நினைவு இன்று.
வில்லை இழந்து
வேலும் இழந்தும்
எதிர் சொல்லையும் இழந்து
நூற்றாண்டு நூற்றாண்டாய்
கூனி குறுகி நின்றோம்.
ஐயா நீங்கள் தந்த
பிள்ளை தான் எம்
கூனல் நீக்கி எம்மை
நிமிர செய்த புரட்சிப்பிள்ளை.
காலம் உள்ளவரை
உங்கள் நினைவு
எம்முடன் என்றும் இருக்கும்
வணங்குகின்றோம் தந்தையே!

.www.vvtuk.com  இணையம்

Leave a Reply

Your email address will not be published.