
இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை, இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது.
சர்வதேச மனிதநேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும், போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான இராணுவமாகவே இலங்கை இராணுவம் இருந்திருக்கிறது என்றும் இந்த இராணுவ நீதிமன்றம் கூறியது.
விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுட்ட போதும் கூட இலங்கைப் படையினர் திரும்ப அந்தப் பகுதிகளுக்குள் குண்டு வீசவில்லை என்றும் இந்த நீதிமன்றம் கூறியது.
பொதுமக்களின் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.
இது தொடர்பாக இலங்கை இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையில்
இந்த நீதிமன்றம் தனது இரண்டாவது பகுதியில், சனல் 4 தொலைக்காட்சி எழுப்பிய மற்றுமொரு பிரச்சினையை, அதாவது சரணடைந்த விடுதலைப்புலிகள் விசாரணையின்றி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை பரிசீலித்து தீர்ப்பளிக்கும் என்றார்.
இராணுவ நீதிமன்றம் இன்னும் அதை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அது குறித்த அறிக்கை பின்னர் தனியாக சமர்ப்பிக்கப்படும் என்றார் பிரிகேடியர்.
சனல் 4 பதில்
இராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கை பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் கேலம் மக்ரேயிடம் பிபிசி கேட்டபோது,
‘இதுபோல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக் கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது.
இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது புதிதாக எதையும் சொல்லவில்லை. எங்களிடம் யாரும் பேசவில்லை, யாரும் எங்களை கலந்தாலோசிக்கவில்லை’ என்று அவர் கூறினார்.
இலங்கை இராணுவம் குண்டுத் தாக்குதல் நடக்கக்கூடாத பகுதி என்று அறிவித்த பகுதிகளிலும் குண்டு தாக்குதல்களை நடத்தியது.
அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன.
இது இராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது’ என்றார் கேலம் மக்ரே.