வல்வையில் கலை கலாச்சார இலக்கிய மன்றத்து இளைஞர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக,வருடந்தோறும் புதுவருடத்தினத்தில்
கலைப்பெருவிழாவையும், மற்றும் பல கலை சம்பந்தப்பட்ட
நிகழ்வுகளையும் நடாத்தி வருவது வழக்கம்.
இவர்களது முயற்சியில், வல்வையர் பலர் கலைத்துறையில் சாதனைகளை படைக்கவேண்டும்
என்ற உயரிய நோக்கத்தோடு இந்தப் பயிற்சிப்பட்டறை உருவாக்கப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை 17/02/2013ல் வேம்படி,உடையாமணல் வீதியில்
அமைந்துள்ள, கலாநிதி திரு.சபா. ராஜேந்திரன் (குட்டிமணி அண்ணா )
அவர்களது இலவச கல்விக்கூடத்தில்,வல்வை கலை கலாச்சார இலக்கிய
மன்றத்தினரால் இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன.
இசையில் தேர்ச்சி பெற்ற இசை ஆசிரியர்களும்,ஓவியத்தில் கைதேர்ந்த
பல்கலைக்கழக கலைப்பீட மாணவரான திரு.சுலக்ஷனும், மேலும் சிலரும் இதில் பயிற்சியளிக்கவுள்ளனர்.
இந்த இலவச பயிற்சி வகுப்புகளில், ஆர்வமுள்ள வல்வை மாணவ,மாணவியர்கள் இணைந்து
தமது திறமைகளை மெருகூட்டிக்கொள்ளலாம்.
அடுத்தாண்டுகளில் நாடகம்,குறும்படம் போன்ற துறைகளிலும் இவர்களின் இந்தப்
பயிற்சிப்பட்டறையை விரிவாக்க திட்டங்கள் உள்ளன.
எமது ஊரில் இவர்களால் இன்னும் பல நல்ல முயற்சிகள்
நடைபெறவேண்டும் என வாழ்த்துவோம்!