Lava கைப்பேசி உற்பத்தி நிறுவனமானது XOLO A1000 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
5 அங்குலம் மற்றும் 1280 x 720 Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கைப்பேசிகள் 1GHz வேகத்தில் செயலாற்றும் Dual Core Processor மற்றும் 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றன.
இவற்றின் இயங்குதளமானது Android 4.1 Jelly Bean ஆக காணப்படுவதுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக்கமெரா ஒன்றும் காணப்படுகின்றது.
மேலும் 100mAh மின்கலங்களை கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது இந்தியப் பெறுமதியில் 13,999 ரூபா ஆகும்.