யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உயர் கல்வி அமைச்சர் மிரட்டுகின்றார்

யாழ். பல்கலைக்கழக விரிவரையாளர்கள் மூவருக்கும் மாணவர்கள் எட்டுப் பேருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட வேளையிலேயே உயர்கல்வி அமைச்சரும் மிரட்டல் விட்டுள்ளார்.

என நாம் இலங்கையர் அமைப்பு இயக்கத்தின் பிரதம அமைப்பாளர் உத்துல் பிரேமரட்ன குற்றம் சுமத்துகின்றார்.

அதே வேளை தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதப்புரட்சி ஒன்றுக்கு தயாராகுவதாகவும் அதற்கு வடபகுதி  பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட முனைவதாகவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸ்ஸநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

அவர் கடந்த டிசம்பர் 16ம் திகதி யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவருக்கும் எட்டு மாணவர்களுக்கும் இறுதி எச்சரிக்கை என மரண அச்சுறுத்தல் விடப்பட்டு பேஸ்டர்கள் ஒட்டப்பட்டதோடு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ தெரியாமல் ஒரு மரண அறிவித்தலையோ அல்லது சினிமா பேஸ்டரையோ கூட ஒட்டமுடியாது.

இப்படியான சுழ்நிலையில் மேற்குறிப்பிட்ட துண்டுப்பிரசுரங்களையும் பேஸ்டர்களாகவும் காவல்துறையினரின் அனுசரனையுடனேயே வெளியிட்டுள்ளனர் என்ற சந்தேகம் உறுதியாகின்றது.

நம் பிரிவினை வாதிகளுடனும் இனவாதகாரர்களுடனும் கூட்டு சேரவில்லை. சகல இன மக்களையும் இணைத்து நாம் இலங்கையர் என்ற ஒற்றுமை உணர்வையே ஏற்படுத்துகின்றோம்.

தற்போது தமிழ் அரசியல் கைதிகள் 900ற்கு மேல் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள்  500 பேருடன் நேரடியான தொடர்புகளைய வைத்துள்ளோம். அவர்களின் குடும்பத்தவர்களுக்கு உதவுகின்றோம்.

அதே போன்று கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்து வருகின்றோம்.

முன்னாள் போராளிகளும் எம்முடன் தொடர்பு வைத்துள்ளனர். அவர்கள் சுதந்திரமாகவும் சுய கௌரவத்துடனும் வாழவே விரும்புகின்றனர்.

இவர்கள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் மீண்டும் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் இவர்களுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டால் அதற்கு தவறான அர்த்தம் கற்பிக்கக் கூடாதெனவும் உத்துல் பிரேமரட்ன மேலும் கூறினார்.

உத்துல் பிரேமரட்ன அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published.