ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக உதயமாகிறது நீச்சல் தடாகம்.

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக உதயமாகிறது  நீச்சல் தடாகம்.

ஆழிக்குமரன்_ஆனந்தன் நினைவாக உதயமாகிறது #நீச்சல்_தடாகம். மங்களசமரவீர தலைமையில் நிகழ்வு.

வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையின் ஊடாக கோடிக்கரையை அடைந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல்தடாகம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வல்வை ரேவடி கடற்கரையில் அமைந்துள்ள முன்னர் சுங்க இலாகாவிற்கு சொந்தமாக இருந்த காணியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.ஹரிஸ் அழைப்பின் பேரில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர் தம்பிராசா, குருகுலராசா மற்றும் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

2017 ஆம் ஆ்ண்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் 25 மில்லியன் ரூபா நிதியில் நீச்சல் தடாகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னர் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.