வடக்கில் எவ்வாறான ஆட்சி நடத்தப்படுகின்றது என்பதனை அரசாங்கமே அம்பலப்படுத்தியுள்ளது – TNA

வடக்கில் எவ்வாறான ஆடச்p நடத்தப்படுகின்றது என்பதனை அரசாங்கமே அம்பலப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அம்பலமானதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு காணப்படுகின்றது, அரசாங்கம் எவ்வாறான நிர்வாகத்தை மேற்கொள்கின்றது என்பதனை குறித்த போராட்டத்திற்கு சென்றவர்கள் கண்கூடாக அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக வடக்கில் எவ்வாறு அரசாங்கம் ஆட்சி செய்கின்றது என்பதனை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விளங்கிக் கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்தத் தாக்குதலுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே பொறுப்பு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.