சிரிய ஜனாதிபதிக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும் – நவனீதம்பிள்ளை

சிரிய ஜனாதிபதிக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும் – நவனீதம்பிள்ளை
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கோரியுள்ளார்.
சிரியாவில் இராணுவ தலையீடு உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உடனடி நடவடிக்கைக்கான அழைப்பினையும் அவர் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஷார் அல் அசாத்தின் படையினர், அவரின் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நட்பு குழுக்களால் சிரியாவில் யுத்த குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானியாவின் செனல் 4 தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியுள்ளார்.
சிரியாவில் மோசமடையும் வன்முறைகளை எவ்வாறு நிறுத்துவது என்பது தொடர்பில் உலகில் அதிகாரமிக்க நாடுகள் இடையில் பிளவுகள் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிரியாவிற்கு எதிரான ஐ.நா பாதுகாப்பு பேரவையின் நகர்வுகளை அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்தும் தடைசெய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளின் காரணமாக குறைந்தபட்சம் 60000 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.