ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாக அடிக்கல் நாட்டல் பகுதி-2
வல்வெட்டித்துறை ஆழிக்குமான் ஆனந்தன் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
78மில்லியன் ரூபா பெறுமதியான குமார் ஆனந்தன் நினைவாக அமைக்கப்படும் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல்லை இன்றைய தினம் காலை 10:00மணியளவில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாட்டினார்.
இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் H.M ஹரிஸ் ,சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,ஆனோட்,
சி.அகிஸதாஸ் ஆழிக்குமரன் ஆனந்தனின் குடும்ப உறுப்பினர்கள்,பிரதேச சபை,நகரசபை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.