வல்வை உதயசூரியன் கழகத்தினால் நடாத்தப்பட்ட தைத்திருநாள் பட்டப்போட்டி 2012

தைத்திருநாளை முன்னிட்டு வல்வை உதயசூரியன் கழகத்தினால், 15-1-2012 அன்று மாலை 3.00 மணிக்கு மாபெரும் பட்டப்போட்டி வெகு விமர்சையாக உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடாத்தப்பட்டது.

இந்தப் பட்டப்போட்டியை காண்பதற்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வந்தமையால், உதயசூரியன் உல்லாசக் கடற்கரை முழுவதும் மக்கள் நிறைந்து இருந்தனர். இந்தப் பட்டப்போட்டியில் பல்வேறு வகையான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பாம்புப் பட்டம், நாரை, மணிக்கூட்டு பட்டம், பொங்கல் பானை பட்டம், ராஜ நாகம், ராகன், வான்வெள்ளி, விமானம், கப்பல் பட்டம், மனிதப்பட்டம், கழகுப் பட்டம், பஞ்சவர்ணபட்டம் என்று பட்டங்கள் கலர் கலராக வானத்தில் வட்டமிட்ட காட்சிகள் பார்வையாளர் மனங்களை மகிழ்சிக் கடலில் ஆழ்தின.

இந்தப் போட்டியில் முதலிடத்தை ராஜநாகம் பட்டம் பெற்றுக்கொண்டது (இதன் உரிமையாளர் வல்வையை சேர்ந்த வெற்றிவடிவேல் மாஸ்டரின் மகன் ராஜேந்திரன்), இரண்டாவது இடத்தை இரட்டைப் பெட்டி பட்டமும் மூண்றாவது இடத்தை சுலரும் பெட்டி பட்டமும் பெற்றுக்கொண்டன. மேலும் ஏழு சிறப்புப் பரிசில்களையும் சேர்த்து மொத்தம் பத்து பட்டங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பல வருடங்களின் பின் உதயசூரியன் உல்லாசக் கடற்கரைக்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். பெருந்திரளான மக்கள் வந்திருந்தாலும், உதயசூரியன் விளையாட்டுக் கழக தலைவர் சுகந்தனும் கழக அங்கத்தவர்களும் பட்டப் போட்டியை மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கமைத்து மக்கள் நன்மதிப்பை பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.