பிரித்தானிய ஊடகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து இந்தியா கேள்வி

பிரித்தானிய ஊடகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்தியாவின் தி ஹிந்து ஊடகம் கேள்வி தெரிவித்துள்ளது.
இலங்கை இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு எனவும், பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.