யா/வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி இன்று (20.02.2013) நெடியகாடு திருசிற்றம்பலப்பிள்ளையார் ஆலய வீதியில் பி.ப.1.45மணிக்கு
பாடசாலை அதிபர் திருமதி.ம.சேதுலிங்கம் தலைமையில், பிரதம விருந்தினராக திரு.சூ.விக்ரர் தனிநாயகம் அவர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளார். மற்றும் சிறப்பு விருந்தினா்களும் கலந்துகொண்டுள்ளனா்.
முதலாவதாக மங்கள விளக்கேற்றி, ஒலிம்பிக் தீபமேற்றி, சத்தியப்பிரமாணம் செய்து,இருபாலரது அணிநடை மரியாதையுடன் கொடியேற்றி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெகு விமர்சையாக நடைபெற்றன. மைதான நிகழ்வுகள் இடைவேளை உடற்பயிச்சி, அஞ்சல் என போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன .வல்வெட்டித்துறை வாழ்மக்கள் பலரும் ,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்,சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கண்டுகளித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர், பிரதம விருந்தினர் உரை, பரிசிகள் வழங்கல், நன்றியுரையுடன் பாடசாலைகீதம் ,கொடியிறக்கல் என இனிதே நிறைவு பெற்றன. நன்றியுரையில் பலரது உதவிகளையும் பாராட்டிய அதிபர், வல்வை ஒன்றியம் தனது வேண்டுகோள்ளுக்கு இணங்க வழமைபோல் நிதி உதவியினை அளித்தமைக்கும்,எமது பாடசாலையின் இரு ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை கொடுத்து உதவிபுரிகின்றமைக்கும்,தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.