2,220 குதிரை வலுக்கொண்ட உலகின் மிகவேகமான இலத்திரனியல் படகு உருவாக்கம்

Mercedes-AMG மற்றும் Cigarette Racing நிறுவனங்கள் இணைந்து 2,220 குதிரை வலுவினைக்கொண்ட உலகின் அதிவேக இலத்திரனியல் படகு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடல்வழி போக்குவரத்தில் புதிய யுகத்தை படைக்கவுள்ள இந்த படகுகள் 38 அடிகள் நீளமானதாகக் காணப்படுவதுடன் மணித்தியாலத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவல்லது. அதாவது 86 நொட்ஸ் வேகம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இப்படகினை இயக்குவதற்காக இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது 6,000 அம்பியர்ஸ் மின்னோட்டத்தை வெளிவிடக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் வெளிவிடப்படும் சக்தியானது 51 லீட்டர் திரவ எரிபொருளின் மூலம் பிறப்பிக்கப்படும் சக்திக்கு சமனாகும்.

Leave a Reply

Your email address will not be published.