ஐக்கிய நாடுகள் சபையில் இவ்வருடம் இலங்கை தப்புவது மிகவும் கஷ்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை தனது அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி படுமோசமாக சித்திரிப்பதனால் அது பக்கச்சார்பான அறிக்கையாகும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நவனீதம்பிள்ளை நிலைமையை மிகைப்படுத்தி கூறியுள்ளதனால் இந்த அறிக்கை நீதியானது அல்ல என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றி முறையான விசாரணைகள் இடம்பெறாதது இலங்கையின் பிழை எனவும் அரசாங்கம் சர்வதேச சமுதாயத்துக்கு வழங்கியிருந்த உறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 285 இல் 133 மட்டுமே மனித உரிமைகள் வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வேலைத்திட்டத்தை ஏற்க சர்வதேச சமுதாயம் மறுத்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட அமர்வின் போது இலங்கை மிகவும் கஷ்டமான நிலைமையை எதிர்கொள்ளும். மனித உரிமை பேரவையில் தனது எதிர் நடவடிக்கைகள் யாவற்றையும் அரசாங்கம் கைவிட்டது போல தெரிகின்றது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் உரிய நேரத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மனித உரிமைகளை பேனவும் தவறியதால் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உட்பட பலர் உயர் இராணுவ அதிகாரிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தவற்றுக்கு இவர்களே பொருப்பாக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.