செவ்வாய் கிரகத்துக்கு 501 நாள் சுற்றுப் பயணம்

செவ்வாய் கிரகத்துக்கு 501 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரான டேனிஸ் டிட்டோ.

ஏற்கெனவே, விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டிட்டோ, விண்வெளிப் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனிப்பட்ட முறையில் செலவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறார். 2018-ம் ஆண்டு ஜனவரியில் 501 நாள் பயணமாக மீண்டும் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தின்போது அவர் செவ்வாய்கிரகம் அருகே சென்று வருவார். மற்றபடி அங்கு இறங்கும் திட்டமோ, அதனைச் சுற்றி வரும் திட்டமோ இல்லை. இது தொடர்பான அறிவிப்பை டிட்டோ விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று தெரிகிறது.

எனினும் மிக நீண்ட நாள்களுக்கு விண்வெளியில் பயணம் மேற்கொள்வது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2001ஆம் ஆண்டில் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிட்டோ பயணம் மேற்கொண்டார். அப்போது ரஷியாவின் சூயஸ் விண்கலத்தில் அவர் சென்றார். இதற்காக சுமார் ரூ.100 கோடிக்கு மேல் அவர் செலவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.