பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் ,இன்று வல்வை றேயின்போஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏழு ஆண்கள் அணியும் ,நான்கு பெண்கள் அணியும் மோதின, ஆண்கள் பிரிவில் அரையிருதிக்கு கலைவாணி விளையட்டுகழகமும், வல்வை விளையாட்டுக்கழகமும் விளையாடியது .இதில் வல்வை விளையாட்டுக்கழகம் இறுதியாட்டத்திற்கு தெரிவாகியது,இரண்டாவது சுற்றில் அண்ணா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்த விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தெரிவாகியது. இறுதியாட்டம் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து, விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. பெண்களுக்கான கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து, பருத்தித்துறை செந்தோமஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் செந்தோமஸ் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.