இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மிகமோசமான யுத்த மீறல்கள் புரியப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இன்று ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர் ஆரம்ப உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை இலங்கை அரசு விரைவாக செயற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை குறித்து பதற்றத்தில் உள்ள அரசாங்கம், நவநீதம்பிள்ளையின் உரை தொடர்பிலும் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.