தமிழ் காத்து வாழ்வோம்

தமிழ் காத்து வாழ்வோம்

 

 

 

 

 

 

 

தமிழ் அழகு மொழி – அறிவு

சிறந்தோர் உதித்த மொழி

தமிழுக்கு அழகு ழகரம் – அந்த

தமிழ் இன்று இழந்தது பல

 

 

நாடு இழந்தோம்

நகரிழந்தோம்

தன்னிகரிலா உறவுகளை இழந்தோம்

தங்கி வந்த நாட்டில்

தமிழில் எங்கள் பேரிழந்தோம்

இத்தனையிலும் பெருமையும் கொண்டோம்

இது எங்கள் சிறுமைதானே

 

தமிழன் நாம் பலர்

பேசுவது தங்கிலிஸ்

பேசுவது தங்கிலிஸனாலும்

அதிலும் பெருமை கொள்ளும்

சிற்றரிவினர் எம்மில் பலர்

 

லகரமும் ழகரமும் றகரமும் ரகரமும்

எம்மில் பலருக்கு

சரியாக வருதில்லையாம்

 

தமிழை காதலி

தமிழுக்காக வாழ்ந்து பார்

அழகு தமிழ் உன்னோடு கொஞ்சும்

 

தமிழன் என்று சொல்வது பெருமை

தலை நிமிர்ந்து நிற்பது பெருமை

தமிழ் காத்து வாழ்வோம்

தலை வகுத்த வழி நிற்போம்.

 

வல்வையூரான்

Leave a Reply

Your email address will not be published.