படைத்தளபதி வருவான், எஞ்சியுள்ள நெருப்பு துண்டுகள், 5ம் கட்ட விடுதலைபோர் ,அரசபயங்கரவதமும் மக்கள் போரட்டமும் – நூல்கள் வெளியீடு

நேற்று காலை 11;00மணியளவில் சென்னையில் உள்ள லையல கல்லுரி சேவியர் அரங்கத்தில் யோசப் கெனடி என்கின்ற கண்மணி எழுதிய  படைத்தளபதி வருவான் ,எஞ்சியுள்ள நெருப்பு துண்டுகள் ,5ம் கட்ட விடுதலைபோர் ,அரசபயங்கரவதமும் மக்கள் போரட்டமும் ஆகிய நூல்களை திரு .பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வெளியிட திரு.நல்லகண்ணு ஐயா பெற்றுக்கொண்டார் .

இன் நிகழ்வில்  கவிஞ்சர்உதயசீலன் வரவேற்புரை நிகழ்த்தினர். வாழ்த்துரையினை உணர்ச்சி கவிஞ்ர்  காசியானந்தன், உரையாற்றினார் மற்றும் இ.க கட்சி தமிழ் நாடு மாநில துணைச்செயலாளர் மகேந்திரன் ,தமிழர் நல பேரியக்கம் மு.களஞ்சியம் ,திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராசு ,மன்னர் மள்ளர் மீட்புகழகம் செந்தில் இந்திய கமினியுஸ்கட்சி மாநில குழு உறுப்பினர் த .லெனின்,பத்திரிகையாளர் எ.ஸ் மணி யும் நன்றி உரையினை ஜோசப் பெனடி என்ற கண்மணி யும் நிகழ்த்தினர் .நிகழ்வின் ஆரம்பத்தில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் தமிழீழ எழுச்சிபடல்களும்,பறைமுழக்கமும் இடம்பெற்றது .

 
திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உரையாற்றும்போது “இந்தியாவில் வங்காளி செய்திருந்தால் மம்தாபானர்ஜி குரல் கொடுத்திருப்பார் ,சீக்கியர் செத்திருந்தால் பஞ்சாப்கிளம்பியிருக்கும் ஆனால் செத்தது தமிழன் தட்டிக்கேக்க தமிழகம் கிளம்பவில்லையே  ஏன் “?

பத்திரிக்கையாளர் லெனின் உரையாற்றும்போது “முள்ளிவைக்கால் முடிவல்ல வியட்நாம் விடுதலைக்கா யப்பான் ,அமெரிக்க,பிரான்ஸ் ஆகிய நாடுகளை எதிர்த்துப் போராடியே  விடுதலை பெற்றது. ஒடுக்கப்பட்ட இனம் எழுந்து நிற்கும் எமது கருத்தால் நிச்சயம் போராட்டம் வெடிக்கும் அதனூடாக தமிழீழம் பிறக்கும் “.என்றார்

களஞ்சியம் அவர்களின் உரையாற்றும்போது  “எதிர் கால தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கவிதையாக்கியுள்ளர் கண்மணி உனக்கும் எனக்கும் நாடு அதை தேட போராடு எமது போராட்ட வடிவங்களைமாற்றி போராட இளைஞ்ர்கள் எழிச்சிபெறவேண்டும்.பத்துக்கோடி தமிழன் இருந்தும் ஒருகோடி சிங்களவன் அழிக்கிறான் தமிழனை அகவே நாம் மீண்டும் தமிழீழம் பெற போராடுவோம் .
உணர்சி கவிஞ்ஞர்  காசியானந்தன் பேசும்போது “பிரபாகரன் ,நேதாஜி பகத்சிங் ,காந்தி  ஆகியோர் பொண்ணியின் செல்வன் வரலாற்றை படித்துதான் போராட்டம் தொடங்கினர்.

இந்தியாவை விட தமிழீழ போராட்டம் பெரிது  இந்தியாவின் விடுதலைக்கு முப்பதினையயிரம் மக்களே இறந்துள்ளனர் ஆனால் தமிழீழ போராட்டத்தில் முப்பதுலட்சம் மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர் .உலகம் யாரை பயங்கரவாதி என்கின்றது 1958ஆண்டு  இலங்கையில் நடந்த இனப்படுகொலை நேரத்தில் தமிழ் பெண்ணின் வயிற்றில் இருந்த பெண்குழந்தையை வெளியில் எடுத்து  சுவற்றில் அடித்து கொலை செய்தார்கள் 2009ம் ஆண்டு அதே இனவெறி அரசாங்கம் பாலச்சந்திரனை படுகொலை செய்தது இடப்பட்ட ஐம்பது வருடகாலத்தில்  இந்த உலகம் ஏன் மெளனித்திருந்தது அகவே அங்குள்ள இளைஞ்சர்கள் ஆயுதம் தூக்கியது தப்பா  ஈழ மண்ணின் விடுதலை போர் ஓயாது விடுதலைக்கான தேவை இருக்கும்வரை  விடுதலைப் போராட்டம் தொடரும் வியட்னாம் போராட்ட காலத்தில் அமெரிக்கா நேபாம்       குண்டு  போடுவேன் என்றது  அதற்கு வியட்நாமியர்கள் சொன்னார்கள்
வியட்நாமியர்கள் ஒவ்வொருவரும் அனுகுண்டுதான் என்றார் இன்று பத்துகோடி தமிழர்களும் அனுகுண்டுதான் என்றார்.

இறுதியாக உரையாற்றிய ஐயா நல்லக்கண்ணு அவர்கள்  இந்தியாவின் மறைந்த முன்னால் பிரதமர் நேரு அவர்கள் வியட்நாம் ,வடகொரிய ,தென்னாபிரிக்கா  ஆகிய விடுதலைப் போராட்டதிற்கு இந்தியா உதவியது அனால் அதே வழி வந்த காங்கிரஸ் அரசு தமிழீழ விடுதைப்போருக்கு எதிரானா நிலைப்பாட்டை எடுத்துள்ளது  வியட்நாம் விடுதலைப்போரட்டத்தின் போது அமேரிக்கா அணுகுண்டு வீசியது அதில் காயமடைந்த ஒரு சிறுமியின் படம் உலக மக்களின் மனச்சாட்சியை தட்டியது போன்று பாலச்சந்திரனின் படத்தை பார்த்து ஏன் மெளனம் காக்கிறது இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பித்து எழுந்தார் .அதன் பின்புதான் கிறிஸ்தவ மதம் பிறந்தது
அதே போல் தமிழீழ மக்களும் சிலுவையில் அறையப்பட்டுள்ளர்கள் மீண்டும் உயிர்ப்பித்து எழும்பி தமிழீழம் பெறுவது திண்ணம் என்றார் .

Leave a Reply

Your email address will not be published.