சின்ன விஷயத்தின் அற்புதம்….

சின்ன விஷயம் என்றதும் என்னடானு தானே பாக்ரீங்க…. மிளகு தாங்க. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சின்ன விஷயம் தான். இருந்தாலும் அதனுடைய மகிமை என்ன என்று தெரிஞ்சிக வேணாமா?

மிளகு நமது பாரம்பரிய உணவு. அந்தக் காலத்தில் உணவுக்கு காரம் கொடுக்க மிளகையே பயன்படுத்தினர். பின்னர் தான் மிளகாய் பயன்பாட்டுக்கு வந்தது. மிளகை கையில் வைத்துக் கொண்டு பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. இது விஷயத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

மிளகை சுத்தமாக பயன் படுத்துவது நல்லது. ஏனென்றால் அதில் சிறு சிறு கற்கள் உள்ள வாய்ப்புள்ளது. எனவே மிளகை மோரில் ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி எடுத்து பயன் படுத்தலாம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிவக்க வறுத்து பயன் படுத்தலாம்.

மிளகு ஜீரண தன்மையை அதிகப்படுத்துகிறது. வயிற்றில் உள்ள வாயு தொல்லையை குணப்படுத்தும் தன்மை கொண்டது. தொண்டை கோளாறு, தொண்டை புண், ஜலதோஷம், வறட்டு இரும்பல், தும்மல், மண்டைக்குத்து, நீர்க்கோர்த்தல் ஆகியவற்றை குணமாக்கும்.

பசியை தூண்டும் தன்மை கொண்டது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி உடலின் எடையை சரியான அளவில் வைத்திருக்கும். அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் மிளகை பொடி செய்து பாலில் கலந்து பருகலாம் அல்லது தேனில் குழைத்து சாப்பிடலாம். மிளகை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள, உண்ணும் உணவு எளிதில் ஜீரணம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.