இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதி ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு என்ன என இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதி ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், இலங்கைக் குறித்து பான் கீ மூன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கவனம் செலுத்தப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக் கூறல் குறித்து தேசிய செயல்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உரையாற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.