உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட Setup முறையிலான கரப்பந்தாட்ட போட்டியின் முதலாவது சுற்றுத் தொடர் நேற்று மின்னொளியில் சிவகுமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வை விளையாட்டுக்கழகம் காலிறுதியாட்டத்தில் கரணவாய் வளர்மதி விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது . இந்தாட்டத்தில் உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் காலிறுதியாட்டத்தில் உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகத்துடன் மோதி தோல்வியடைந்திருந்தது.