வரலாறு படைத்து நிற்கும் ஜெனிவா பேரணி-பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழீழ தனிநாடு கோரி ஜ.நா முன்றலில் திரண்டனர் (காணொளி)

வரலாறு படைத்து நிற்கும் ஜெனிவா பேரணி-பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழீழ தனிநாடு கோரி ஜ.நா முன்றலில் திரண்டனர்  (காணொளி)

ஜ.நாவில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் செய்தி தமிழர்களுக்கு தீர்வு தமிழீழ் தான் என்பதை பன்னாடுகளுக்கு சொல்லி நிக்கின்றது. ஜெனீவாவில் ஆயிரம் ஆயிரம் தமிழ்மக்கள் திரண்டு தலைவர் அவர்களின் பின்னால் நாங்கள் நிக்கின்றோம் என்பதையும்,ஏந்திய புலிக்கொடி தமிழீழம் தான் தமிழர்க்கு தீர்வு என்பதை உணர்த்திநிக்கின்றது.

சிங்கள அரசின் இனஅடக்குமுறையினையும்,இனஅழிப்பினையும்,நிலஆக்கிரமிப்பினையும் கண்டித்து ஜக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்தவேண்டி ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்கொணர்ந்தார்கள். 

  பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜெனீவா முன்றலுக்கு சென்று தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.    போர்ப்பறை முழங்கள எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் போர்க்குற்ற வாளியினை விசாரிக்க வேண்டும் ஜ.நா சுயாதீனவிசாரணையினை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கானமக்கள் ஜெனிவா புகையிரதநிலைய சந்தியில் இருந்து அணிதிரண்டார்கள். பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் தொடங்கிய பேரணி ஜெனீவா முன்றலில் சென்றடைந்தது.   

அங்கு ஈகப்பேரொளி முருகதாசன், முத்துக்குமார்,மாமநிதார் சந்தியமூர்தியின் திருவுருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்தார்கள் அதனை தொடர்ந்து மக்களின் எழுச்சி முழக்கங்கள் தொடர்ந்து நடைபெற்றது. 

இவற்றிற்கு எழுச்சி சேர்க்கும் முகமாக ஜ.நா முன்றலில் தமிழினத்தின் இனஅழிப்பு சாட்சியங்களை முன்வைத்து நீதிகேட்டு இனஅழிப்பு கண்காட்சி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தமை இன்னும் சிறப்பாக இருந்தது.

http://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(10).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(8).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(9).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(14).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(16).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(17).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(7).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(18).JPGhttp://eeladhesam.com/images/stories/new/news/01.05.2012/v-genevanews2013pooraaddam%20(19).JPG

Leave a Reply

Your email address will not be published.