வல்வை பாடசாலைகள், வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. இன்று (06.03.2013 ) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுக்கள் ,வடமராட்ச்சி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கோட்டங்கலான பருத்தித்துறை கோட்டம், மருதங்கேணி கோட்டம், கரவெட்டி கோட்டம் ஆகிய கோட்டங்களுக்கிடையிலான போட்டி , பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மைதானத்திலும், பருத்தித்துறை மெதடிஷ் கல்லூரியில் தட்டு,ஈட்டிஎறிதல் என்பன நடைபெற்றன.
இன்று சிறுவர் சிறுமியர் தொடக்கம், மேல்பிரிவு மாணவர்களுக்கான பல விளையாட்டுக்கலான, 50மீட்டர் ஓடடம், 100 மீட்டர் ஓட்டம், 75மீட்டர் ஓட்டம், நிளம்பாய்தல்,உயரம்பாய்தல்,குண்டுதள்ளுதல்,தட்டு,ஈட்டி எறிதல்,100×2, 100×4 ஆகியன விறுவிறுப்புடன் நடைபெற்றன.இன்றைய போட்டித்தெரிவுகள் இறுதித்தேரிவுகள் அணைத்தும் 1.30மணியளவில் நிறைவு பெற்றன.