இளவரசி கேட்டுக்கு பெண் குழந்தை? டெடிபேர் பொம்மையில் ரகசியம்

இளவரசி கேட்டுக்கு பெண் குழந்தை? டெடிபேர் பொம்மையில் ரகசியம்

தற்போது கர்ப்பமாக இருக்கும் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இளவரசி கேட்டுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும் யூலையில் பிரசவம் என்றும் லண்டன் பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் இளவரசியை பொது இடத்தில் சந்தித்த ஒரு பெண் அவரிடம் “டெடிபேர்” பொம்மையை பரிசாக வழங்கினார்.

அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட இளவரசி, நன்றி இதை எனது ‘டா’ என்று முடித்துக்கொண்டார். அதாவது ‘டாட்டர்’ (மகள்) என்று சொல்ல வந்தவர், ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என உஷாராகி “டா”வுடன் முடித்துக்கொண்டார்.

இதை வைத்தே அவருக்கு பிறக்கப்போவது பெண்தான் என்றும், கேட்டுக்கு முன் கூட்டியே தெரிந்திருப்பதால் தான் அவர் வாயில் இருந்து “டாட்டர்” என வந்து இருக்கிறது என்பதை மேற்கோள் காட்டி லண்டன் பத்திரிகைகள் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.