முடிவுக்கு வருகிறது ஹாட்மெயிலின் சகாப்தம்

முடிவுக்கு வருகிறது ஹாட்மெயிலின் சகாப்தம்

இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில் தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ளவிருக்கிறது.

இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது.

இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது.

இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக நடத்தியது.

ஆனாலும், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள், அதைவிட்டு நகர வில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் உலகில் முதல் இடத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதனைக் கண்ட மைக்ரோசாப்ட், சில ஆண்டு களுக்கு முன்னர், ஹாட்மெயில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றி தொடர்ந்து இயக்கியும் வருகிறது.

ஆனால், தன் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஹாட்மெயிலை மூடி, அதன் பல கோடி வாடிக்கையாளர்களை தன் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றும் முடிவை மைக்ரோசாப்ட் அறிவித்தது.

அறிவிப்பிற்குப் பின்னரும் அவுட்லுக் இயங்கி வந்ததால் அதன் வாடிக்கையாளர்கள் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

வரும் சில மாதங்களில் இதனை முழுமையாக அமுல்படுத்தி, ஹாட் மெயில் தளத்தை மூட இருப்பதாக அண்மையில் மைக்ரோசாப்ட் அறிவித்தது.

இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், திடீரென ஹாட் மெயில் மூடப்படும் என்பதனைப் பலரால் மனதளவில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்படும் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 8 பயன்படுத்தினால், முற்றிலும் புதிய அனுபவம் காத்திருக்கிறது. அவுட்லுக் டாட் காம் தளத்திலேயே பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய இன்டர்பேஸ் தரும் அனுபவம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.