புரட்சி கவிதை
மரணித்து போயுள்ள
மனிதாபிமானத்தை
மீண்டும் மீட்டெடுக்க
மனிதன் மனிதனாக
மாறவேண்டும்!
இல்லையென்ற வறுமை மொழி
இவ்வுலகில் இருந்து ஒழிய
இருப்பவன் மேலதிகத்தை
இழக்க முன்வரவேண்டும்!!
உரிமைகள் மறுக்கப்பட்டு
ஊமைகளாய் வாழும்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
அடக்குமுறையிலிருந்து
விடிவு வேண்டும்!!!
பணத்தை அங்கீகரித்து
குணத்தை நிராகரித்து
மமதையில் வாழும்
மனிதன் அன்பை
நேசிக்க வேண்டும்!!!!
உதவியின்றி தவிப்போருக்கு
உதவுவதற்கு முன்வருவோர்
இவ்வுலகில் நீடூழி வாழ வேண்டும்!!!!!