செய்திகள்

உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உட்பட உணர்வாளர்கள் நள்ளிரவில் கைது.

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர்  மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்ந்தது   .

உண்ணாவிரதத்தை ஆதரித்து, தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதனிடையே, மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் பிரதிநிதிகள் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வந்த நிலையில்

இன்று 11.03.2013 அதிகாலை   1.45 மணியளவில் உண்ணாவிரத பந்தல் அருகில் போலீஸ் படை குவித்து  போராட்டம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் இயக்குனர்.கௌதமன், இயக்குனர்.களஞ்சியம்,  ம.தி.மு.க. மல்லை சத்யா , வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி,  மே 17 இயக்கம் திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா ஸ்டாலின்,செந்தில்,அருண்செளரி,திருமலை உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில்   தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *