நேதாஜி விளையாட்டு கழகம் 53 வது வருட நிறைவு ஆண்டுவிழாவினை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்களுக்கிடையே நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சைனிங்ஸ் அணி அரையிறுதியில் இன்று பலமான ரேவடி அணியுடன் மோதியது ஆட்ட ஆரம்பம் முதல் இறுதிவரை சைனிங்ஸ் வீரர்களின் சிறப்பான ஆட்டமும் நுட்பமான பந்துப்பரிமாற்றம் மூலம் ஆதிக்கம் செலுத்திய சைனிங்ஸ் அணி இடைவேளைக்கு முன்னர் 2 கோல்களையும் இடைவேளையின் பின்னர் 2 கோல்களையும் போட்டு ரேவடி அணியினை 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பிரசாந் 2
துளசிராம் 1
குமரன் 1
இறுதிப்போட்டியில் உதயசூரியன் அணியுடன் மோதிய சைனிங்ஸ் அணி முற்பாதியாட்டத்தில் 1கோலினை போட்டு முன்னிலை வகித்தது.இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மேலதிக கோல்கள் பெறாத நிலையில் சைனிங்ஸ் அணி 1:0 என வெற்றி பெற்றது.
துளசிராம் 1
நேதாஜி அணியின் ஆண்டுவிழா கிண்ணத்தினை சுவீகரித்து சம்பியனாகியது சைனிங்ஸ் அணி.