நேட்டோ படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் ஆப்கானின் பிரபல நடிகரான நஸார் முகம்மது மஜ்நோன்யார் ஹெல்மாண்டி பலியாகியுள்ளார்.
தீவிரவாதம், போதை மருந்துக் கடத்தலுக்கு எதிரான பல படங்களில் நடித்து தலிபான்கள், அல் கொய்தாவுக்கு எதிர்ப்புக்கு உள்ளானவர் மஜ்நோன்யார் ஹெல்மாண்டி.
இவர் தங்களை உளவு பார்ப்பதாகக் கருதிய தலிபான்கள் சமீபத்தில் இவரை சிறை பிடித்து, ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெல்மாண்டி மாகாணத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதாகக் கூறிக் கொண்டு நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் நஸாரும் அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை அமெரிக்கத் தரப்பு மூடி மறைக்க முயன்றது. ஆனால், ரஷ்ய செய்தி நிறுவனங்கள் இந்தத் தகவலை வெளியுலகுக்குத் தெரிவித்துள்ளன