Search

மனிதன் 150 ஆண்டு காலம் வாழ்வதற்கான மருந்து கண்டுபிடிப்பு

மனிதன் முதிர்ச்சியடைவதால் ஏற்படும் நடுக்கம், ஞாபக மறதி, முகச்சுருக்கம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து இளமையை நீட்டிக்கச் செய்யும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கு சிவப்பு ஒயினில் காணப்படும் ரேச்வரேட்ரால் என்ற வேதிப்பொருள் நல்ல மாற்றாக இருக்கமுடியும் என்று விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதனின் உடலில் உள்ள மூப்பு நீக்கக்கூடிய ஒருவித என்சைமினை, இந்த வேதிப்பொருள் கொண்ட மாத்திரைகள் கொண்டு தூண்டிவிடுவதன் மூலம், மனிதன் வயதாகும் தன்மையை நீக்கி 150 ஆண்டு காலம் வாழமுடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த மருந்துகள் சாதாரண மருந்துகளைப்போல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது, 20க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் இன்னும் 5 ஆண்டுகளில் இது சாத்தியப்படலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த, முதுமை நீக்கும் வழிமுறைகளில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையில் ஒருவருக்கு ஏற்படும் மறதிகூட ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *