கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் திருநாளன தைத்திருநாளன்று இடம்பெற்ற ஒன்பதாம் போட்டியில் வல்வை புளூஸ் அணி சுபன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதியிருந்தது. இதில் வல்வை புளூஸ் அணி 2 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த அணியுடன் முதலாம் சுற்றில் புளூஸ் அணி 3 -2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இடைவேளைக்கு முதல் வல்வை புளூஸ் அணி ரிஷி போட்ட கோலைத்தொடர்ந்து 1 -0 என்ற வித்தியாசத்தில் முன்னியில் நின்றது. இடைவேளைக்குப்பின் சிறீ ஒரு கோலைப்போட்டு புளூஸின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ஆட்டம் முடிவதற்கு 2 நிமிடங்கள் இருக்கும் நிலையில் சுபன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப்போட்டது. எப்படி முயற்சி செய்தும் சுபன் விளையாட்டுக் கழகத்தால் புளூஸ் கழகம் ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைக்கு போவதை தடுக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22 /01 /2012 அன்று ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை எதிர்த்து மோதவுள்ளது.
செய்திகள்: ஆதவன்