கனடாவைச் சேர்ந்தவர் மக்னோட்டா (வயது 30). ஆபாச பட நடிகரான இவர் கான்கார்டியா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த ஜூன் லின் என்ற சீன மாணவனை கடந்த ஆண்டு கொலை செய்ததாகவும், பின்னர் அவன் கை கால்கள், தலை ஆகியவற்றை வெட்டி, உடல் உறுப்புகளை சாப்பிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சீன மாணவனைக் கொன்ற காட்சிகள் அனைத்தையும் அவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ உண்மையானது தான் என போலீசார் கூறியுள்ளனர். இந்த வீடியோவில் ஒருவர் சாகும்வரை கத்தியால் குத்தப்படுகிறார். பின்னர் உடலிலிருந்து அவரது கைகால்களை வெட்டி எடுக்கப்பட்டு அவரது உறுப்புகளை சாப்பிடுவது போலவும் உள்ளது.
மேலும் அவரின் உடல் பாகங்களை லின் படித்த கல்லூரிக்கும், கனடாவின் தலைநகரான ஒட்டவா மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் பார்சல் அனுபியுள்ளார். இதனால் கனடா பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.
அதன் பிறகு நடந்த தேடுதல் வேட்டையில் நடிகர் மக்னோட்டா கைது செய்யப்பட்டு, ஜெர்மனியிலிருந்து மோண்ட்ரியலில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரிடம் 3 வாரம் வரை தொடர்ந்து விசாரணை நடைபெறும்.